இட்லிக்கடைக்காரர் மகனுக்கு உதவி செய்த அஜீத்

25

நடிகர் அஜீத் பலருக்கும் உதவி செய்பவர் என்பது தெரியும். அவர் தன் பார்வையின் கீழ் வரும் விசயங்களுக்கு பண உதவி, பொருள் உதவி செய்வார் என்பது எல்லோரும் அறிந்த விசயமே.

அப்படியாக சமீபத்தில் வாரணாசி சென்றபோது அங்கே  தமிழர் ஒருவரின் ப்ளாட்பார்ம் வண்டிக்கடையை தேடி அங்கு சாட் மசால சாப்பிட்டார் அஜீத். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

வெறும் புகைப்படம் மட்டும்தான் அஜீத் எடுத்துக்கொண்டார் பார்த்தால் இதுமட்டும் அல்லாது வாரணாசியில் உள்ள ஒரு இட்லிக்கடையிலும் அஜீத் சாப்பிட்டுள்ளார். நீண்ட தூர பைக் பயணம் செய்தபோது இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அஜீத்தை அடையாளம் கண்ட அந்த வண்டிக்கடைக்காரரின் மகனுக்கு அஜீத் உதவி செய்துள்ளார்.

அஜீத்திடம் பேசிய சிறுவன் கொரோனா காரணமாக வருமானம் போதிய அளவில் இல்லாததால் ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியவில்லை என கூறி இருக்கிறான். இதை கேட்ட அஜீத் அந்த ஏரியா லொக்கேஷன் மேனேஜரை தொடர்பு கொண்டு சிறுவனுக்கு தேவையான வசதியை செய்து கொடுக்கும்படி கூறி இருக்கிறார்.

பாருங்க:  தரவரிசையில் முதலிடத்தை இழந்த இந்தியா! காரணம் இதுதான்!