தேவையான பொருள்கள் –
- வெள்ளை முழு உளுந்து – 1 கப்
- கடலைப்பருப்பு – 1/2 கப்
- மிளகாய் வத்தல் – 10
- பெருங்காயத்தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
அடுப்பில் வெறும் பாத்திரம் வைத்து உளுந்தம் பருப்பை போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வாசம் வரும் வரை வறுத்து தனியே வைத்துவிடவும்.
அந்த சூட்டில் மிளகாய் வத்தல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி வறுத்து வைத்திருக்கும் உளுந்தம் பருப்போடு சேர்த்து சிறிது நேரம் ஆறவிடவும்.
ஆறியதும் மிக்ஸ்சியில் அரைக்கவும். பிறகு ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் எடுத்து வைக்கவும். இட்லி, தோசையுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.