Connect with us

நான் ஹிந்துதான் -கிருஷ்ணசாமி விளக்கம்

Latest News

நான் ஹிந்துதான் -கிருஷ்ணசாமி விளக்கம்

தான் ஏன் ஹிந்து மதம் குறித்து இப்படி பேசுகிறேன் என கிருஷ்ணசாமி விளக்கமளித்துள்ளார்.

சில பேர் ஆச்சரியமாக ‘இந்து என்று கிருஷ்ணசாமியா பேசுகிறார்’ என கேட்கிறார்கள்.
ஆம், ‘இந்து’ என்று கிருஷ்ணசாமி தான் பேசுகிறேன்.!
செங்கோட்டையில் நடைபெற்ற உலக இந்துக்கள் எழுச்சி மற்றும் ஒருங்கிணைப்பு சிறப்பு மாநாட்டில் பேச்சு:
நான் பிறந்தது, கோவை மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ளது மசக்கவுண்டன் புதூர் கிராமம். தென் மாவட்டங்களை போல தேவேந்திர குல வேளாளர் சமூகம் அடர்த்தியாக வாழும் பகுதி அல்ல, எங்கள் ஊரில் 50 குடும்பங்கள், எங்கள் ஊருக்கு அருகாமையில் மூன்றே சின்ன கிராமங்கள் தான் இருந்தது.
சமூக ஒடுக்குமுறை இல்லாத சமூகங்கள் கூட பிற மதத்திற்கு மாறி வந்தார்கள். ஆனால், நாங்கள் எவ்வளவோ சமூக ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டிருந்தாலும் சிலரை போல எந்த மதத்திற்கும் மாறவில்லை. அந்த சின்ன கிராமத்திலும் கூட எங்களது முன்னோர்களை வழிபட்டும், பாரம்பரியமான ‘இந்து’ என்ற அடையாளத்தோடு ‘தேவேந்திரகுல வேளாளர்களாக’ தான் வாழ்ந்து வந்தோம்; வருகிறோம்.
என் அப்பா ‘இந்து’, எனது முன்னோர்கள் ‘இந்து’,
நான் பேசமால் இந்துக்களுக்காக வேறு யார் பேச முடியும்? என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
பாருங்க:  முதலமைச்சரின் தைப்பொங்கல் அறிவிப்பு

More in Latest News

To Top