தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்

21

நேற்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் மிகப்பெரும் வகையில் வெற்றி வாகை சூடியது. திமுகவிலும் சரி அதிமுகவிலும் சரி மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் சிலர் வெற்றி பெற்றுள்ளனர்.

திரு எடப்பாடி பழனிச்சாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை 92000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி அமோக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர்.

ஆத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் கூட்டணியான பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிட்டார். நேற்று திண்டுக்கல்லில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அனைத்து சுற்றுகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஐ.பெரியசாமி முன்னிலை பெற்று வந்தார். வாக்கு எண்ணிக்கை முடிவில் ஐ.பெரியசாமி 1,63,689 வாக்குகளும், பாமக வேட்பாளர் திலகபாமா 29,607 வாக்குகளும் பெற்றனர்.

இதனால் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவரானார் இவர்.

பாருங்க:  உயிரோடு இருப்பது உங்களுக்கு பிடிக்கலையா- எஸ்.ஏ சந்திரசேகர்
Previous articleஇசைப்புயலின் வாழ்த்துக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்
Next articleவலிமை பட வில்லன் தரும் அப்டேட்