Connect with us

6 வயது சிறுமி பாலியல் கொலை- தேடப்பட்ட நபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Latest News

6 வயது சிறுமி பாலியல் கொலை- தேடப்பட்ட நபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள சைதாபாத் காவல்நிலையத்திற்கு உட்பட்ட சிங்கிரேனி காலனியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு 6 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடி கொண்டுருந்தார்.அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த ராஜு (30) என்பவர் சிப்ஸ் வாங்கி தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.

விளையாட சென்ற மகள் வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமி, ராஜு வீட்டுக்கு சென்றது உறுதியானது.
இதைத் தொடர்ந்து ராஜு வீட்டில் சோதனை நடத்திய போது சிறுமியின் உடல் படுக்கையில் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ராஜு தலைமறைவாகியுள்ளதால் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கூலி வேலை செய்துவரும் ராஜு, மது அருந்தி தினம்தோறும் மனைவியை அடித்து வந்ததால் மனைவியும் , அவரது தாயாரும் பிரிந்து சென்ற நிலையில், தனியாக வசித்து வந்த ராஜு, சிறுமியை கொலை செய்த பிறகு தலைமறைவாகியுள்ளார். ராஜு மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராஜுவை பிடிக்க போலீஸார் 10 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர் இந்த நிலையில் ராஜூ இன்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ராஜூ குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் பரிசும் அறிவிக்கப்பட்டு இருந்தது மாநில காவல்துறையில் 3000 போலிசார் ராஜூவை தேடி வந்த நிலையில் ராஜு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in Latest News

To Top