Latest News
குழந்தை பிறந்து எத்தனை நாட்களில் ஜாதகம் எழுத வேண்டும்
குழந்தை பிறந்த ஒரு மாதத்திலேயே ஏன் ஜாதகம் எழுத வேண்டும்?
உங்களுடைய குழந்தை பிறந்து வருடம் ஒரு வருடம் வரை கழித்து ஜாதகம் எழுதும் பழக்கம் இன்றும் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது.
இது முற்றிலும் தவறு.
காலத்துக்குத் தகுந்தாற்போல நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாட்டின் மன்னனுக்கு குழந்தை பிறந்தால் உடனடியாக ஜாதகம் கணித்து எழுதி விடுவார்கள்.
ஏனென்றால் நாட்டின் நலன் கருதி அவ்வாறு எழுதும் பழக்கம் இருந்தது.
நாம் இப்பொழுது ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
ஜனங்களை நாயகமாக வைத்துக் கொண்டு இயங்கும் அரசியலுக்கு ஜனநாயக நாடு என்று பெயர் .
அந்த அடிப்படையில் நம் நாட்டில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவருமே மன்னர்கள்தான் !!
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் !!!”என்று சொல்வது இந்த கருத்தின் அடிப்படையில் தான்.
அந்த அடிப்படையில் குழந்தை பிறந்த ஒரு மாதத்திற்குள் ஜாதகம் எழுதும் பழக்கத்தை நாம் கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.
சுமாராக 30 ஆண்டுகளுக்கு முன்புவரை பாலாரிஷ்ட தோஷம் என்ற ஒரு தோஷம் பரவலாக இருந்தது .
அதாவது ஒரு குழந்தை பிறந்து மூன்று வயது வரை பல்வேறு விதமான நோய்கள் அதைத் தாக்கும்.அதனால் 1970 வரை குழந்தை மரணங்கள் அதிகமாக இருந்தன .
அதனால் அந்த குழந்தை மூன்று வயது வரை பாலாரிஷ்ட தோஷம் என்ற தோஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கும்.
எனவே மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் ஜாதகம் எழுதும் பழக்கம் இருந்தது.
கடந்த 30 ஆண்டுகளில் படிப்படியாக கர்ப்பிணி ஆன முதல் குழந்தை பிறக்கும் வரை பல்வேறு விதமான மருந்துகள் மற்றும் சத்துள்ள உணவுகள் சாப்பிடும் பழக்கம் நம்மிடையே பரவலாகி விட்டது.
இந்த நவீன மாற்றத்தின் மூலமாக பாலாரிஷ்ட தோஷம் இப்பொழுது இயங்குவது கிடையாது.
அதனால்தான் உங்களுக்கு குழந்தை பிறந்தால் அல்லது உங்களுடைய வீட்டில் புதிய வாரிசு உண்டானால் குழந்தை பிறந்த 30 நாட்களுக்குள் ஜாதகம் எழுதுவது நன்று.
குழந்தை பிறந்த நேரத்தின் அடிப்படையில் என்று கம்ப்யூட்டர் ஜாதகம் பிரபலமாகிக் கொண்டிருக்கிறது அதைவிடச் சிறந்தது ஒரு ஜோதிடர் மூலமாக ஜாதகம் எழுதி வாங்குவது நன்று. அதற்குத்தான் குருவின் பார்வை முழுமையாக கிடைக்கும்.
சிவராஜ யோக ஜோதிடர்
வீரமுனி சுவாமிகள்
9629439499
ராஜபாளையம்.
