Connect with us

Entertainment

பாலிவுட் நடிகர் பாடகர் மீது மனைவி வழக்கு

பாலிவுட்டின் பிரபல பாடகர் ஹனி சிங் இவர் பாடகர் மட்டுமல்லாது நடிகரும் கூட. இவரது மனைவி ஷாலினி தல்வார் இவரும் பாடகியாவார். சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் படத்தில் இவர் பாடியுள்ளார்.

இந்நிலையில், ஷாலினி தல்வார் டெல்லி குடும்ப நீதிமன்றத்தில் தனது கணவர் மீது பரபரப்பு புகாரை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘எனது கணவர் ஹனி சிங் என்னை உடல், மனம், வார்த்தைகளால் துன்புறுத்தி வருகிறார். எங்களுக்கு கடந்த 2011ம் ஆண்டில் திருமணம் நடந்தது. பாடகரான அவரது புகழ் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, என்னை அவர் மதிப்பதில்லை. மாறாக அவர் என்னை துன்புறுத்த தொடங்கினார். மதுபோதைக்கு அடிமையான அவர் என்னை பல வகையிலும் கொடுமைப்படுத்தி வருகிறார்.

பல பெண்களுடன் அவர்  பாலியல் ரீதியான தொடர்பில் உள்ளார்’ என்று ஷாலினி தல்வார் தெரிவித்துள்ளார்.அவரின் வக்கீல்கள், நீதிபதியிடம் முறையிடுகையில், ‘எதிர்மனுதாரரின் பெயரில் உள்ள சொத்துகளை தனிநபரோ, கூட்டாகவோ மூன்றாம் நபருக்கு விற்கவோ, தானம் செய்யவோ தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர். இந்த மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்  ஹனி சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பும்படியும், இந்த வழக்கை ஆக. 28ம் தேதி விசாரிக்க உள்ளதாகவும் கூறினார்.

பாருங்க:  52 வயது தாய்க்கு 22 வயது இளைஞருடன் காதல்! நெய்மாரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!

Entertainment

பாடகர் எஸ்.பி.பியின் முதலாம் ஆண்டு நினைவு

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என தென்னக மொழிகள் இந்திய மொழிகள் அனைத்திலும் பாடி புகழ்பெற்றவர் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம்.

ஆயிரம் நிலவே வா என்ற அடிமைப்பெண் பாடல் மூலம் அவர் அறிமுகமானாலும் அவர் இரண்டாவதாக பாடிய சாந்தி நிலையம் படப்பாடலான இயற்கை எனும் இளைய கன்னி என்ற பாடல்தான் முதலாவதாக ரிலீஸ் ஆனது.

அனைத்து மொழிகளிலும் 40000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்த பாடகர் எஸ்.பி.பி.

எம்.ஜி.ஆர், சிவாஜி ,ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, தற்போதைய தனுஷ் வரை மூன்று தலைமுறை நடிகர்களுக்கு பாடியவர் எஸ்.பி.பி.

இவர் மறைந்தபோது இவருக்கு 70வயதுக்கு மேல் ஆகி இருந்தாலும் சின்னப்பையனுக்கு பின்னணி பாடினால் கூட அந்த சின்னப்பையனின் குரல் போலவே இருப்பதாக நாம் எண்ணுவதுதான் இவரது வெற்றி. அந்த அளவு இவரது பாடல்கள் என்றும் இளமையாக இருக்கும்.

கடந்த வருடம் லேசான கொரோனா தொற்றினால் அவதிப்பட்டு வந்த எஸ்.பி.பி முகநூலில் வந்து நான் ஆஸ்பத்திரி செல்கிறேன் லேசாக உடம்பு சரியில்ல என்று போஸ்ட் போட்டுவிட்டுதான் சென்றார். ஆனால் நாள் ஆக ஆக இவரின் உடல்நிலை மோசமானது நுரையீரல் மற்றும் சுவாசப்பாதைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 25 அன்று இயற்கை எய்தினார்.

அவரது குரலில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்தே படத்தில் அவரது பாடல் வர உள்ளது அவரது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல்.

இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள் காணும் எஸ்.பி.பியை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போற்றி வருகின்றனர். நாமும் அவரை நினைவு கூர்வோம்.

பாருங்க:  இந்தியில் அசுரன் எப்படி

Continue Reading

Entertainment

இயக்குனர் தயாரிப்பாளர் கே.ஆர் மனைவி மரணம்

தமிழில் ஈரமான ரோஜாவே, இரட்டை ரோஜா, வனஜா கிரிஜா, கும்பகோணம் கோபாலு, கவலைப்படாதே சகோதரா, எனக்கொரு மகன் பிறப்பான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் இயக்குனர் கே.ஆர்.

இவர் சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். இவரது மனைவி திருமதி இந்திரா கே.ஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை மரணம் அடைந்தார்.

அவருக்கு வயது 67

பாருங்க:  ஈஷா வளாகத்தை மருத்துவமனையாக் மாற்றிக் கொள்ளுங்கள்- ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு!
Continue Reading

Entertainment

கொம்பு வச்ச சிங்கம்டா ட்ரெய்லர்

எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்து முடித்துள்ள படம் கொம்பு வச்ச சிங்கம்டா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாகிறது. தற்போதுதான் இதன் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எஸ்.ஆர் பிரபாகரன் சசிக்குமார் கூட்டணியில் வெளியான சுந்தரபாண்டியன் பெரிய வெற்றியை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  கணவர் ஆபாச படம் தமக்கு தெரியாது- ஷில்பா செட்டி
Continue Reading

Trending