Latest News
யூ டியூபை பார்த்து துப்பாக்கி தயாரிக்க முயற்சி செய்த இரண்டு பேர் கைது
யூ டியூபை பார்த்து எது எதைத்தான் செய்வது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது. சில நாட்களுக்கு முன்னர் யூ டியூபை பார்த்து பிரசவம் பார்த்தனர். அது செய்திகளில் பரபரப்பாக வெளியானது.
சிலர் யூ டியூபை பார்த்து சமைக்கின்றனர் அது எல்லாம் ஓக்கே ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயம்தான். ஆனால் இந்த யூ டியூபை பார்த்தே எல்லாம் செய்யணும்னு நினைக்கிறதுதான் கொஞ்சம் நெருடலான விசயம்.
யூ டியூபை பார்த்து எல்லாம் செய்தது போக இப்போது இரண்டு பேர் துப்பாக்கி தயாரித்து கையும் களவுமாக போலிசிடம் மாட்டிக்கொண்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் குமாரப்பேட்டையை சேர்ந்த ஆறுமுகம், திருமானிக்குழி சங்கர் இருவரும் யூ டியூபில் வித்தியாசமான வீடியோக்களை தேடுவது வழக்கம் அப்படியாக இவர்கள் துப்பாக்கி செய்வது எப்படி என்ற வீடியோவான ஹவ் டூ மேக் கண்ட்ரி மேட் ரைஃபில் என்ற வீடியோவை பார்த்துள்ளனர்.
செய்வதற்கு தேவையான கிடைக்காத உதிரிபாகங்கள் சாமானையெல்லாம் அலைந்து திரிந்து அவர்கள் வாங்கியுள்ளனர். இவர்கள் செய்வது பலருக்கு சந்தேகம் வர அக்கம் பக்கத்தினர் திருப்பாதிரிபுலியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் சொல்லியுள்ளனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் பாதி செய்தும் செய்யாமல் அரைகுறை நிலையில் இருந்த துப்பாக்கிகளை கைப்பற்றினார். விசாரணையில் இவர்கள் கொக்கு, குருவி செய்வதற்கு தாங்கள் துப்பாக்கி தயாரித்ததாக கூறினர்.
தற்போது இருவரும் கடலூர் ஜெயிலில் கம்பி எண்ணி வருகின்றனர்.