அம்பாசிடர் காரை நாம் யாரும் மறக்க முடியாது. நாம் பிறந்து வளர்ந்த ஊர்களில் பெரும்பாலும் செல்வந்தர்களிடம் அம்பாசிடர் கார் இருப்பதை நம் காணமுடிந்தது.
தாத்தா பாட்டி காலத்தில் அம்பாசிடர் கார் வைத்தவர் என்றாலே ஊரில் ஒரு தனி கெத்து தான். ஆனால் நாகரீக மாற்றத்தினால் அம்பாசிடர் கார் இருந்த இடமே தெரியாமல் போய் விட்டது, என்றுதான் சொல்ல வேண்டும்.
சந்தையில் பல நாட்டு நிறுவன கார்கள் வந்து குவிந்து போகவே அம்பாசிடர் காரை மறந்துவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். இதனை மீட்டேடுக்கும் முயற்சியாக பிரபல நிறுவனமான இந்துஸ்தான் நிறுவனம் இந்தியாவில் அம்பாசிடர் காரை ரோல்ஸ் ராய்ஸ் rolls-royce காட்டிலும் படு கிளாமரான லுக்கில் சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
அதிலும், இந்துஸ்தான் நிறுவனம் புதிய அம்பாசிடர் காரை மிகவும் மார்டனாக மாற்றி பல கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இணையாக கொண்டு வந்து விட்டது. இதில் என்ன விசேஷம் என்றால், இந்த புதிய அம்பாசிடர் கார் மின்சாரத்தை கொண்டு இயக்கப்படும் தனி சிறப்பு வாய்ந்தது. எனவே, சந்தையில் புதிய அம்பாசிடர் கார் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கீழே இருக்கும் படத்தை பாருங்கள் அதை பார்க்கும்போது நம்ம அம்பாசிடர் கார்ரா இது? என்று வாயை பிளக்கும் அளவிற்கு மிகவும் மாஸ்ஸான லுக்கில் களமிறங்கியுள்ளது.



