Entertainment
ஹிந்தி தெரிந்தவருக்கு பார்த்திபன் கொடுக்கும் வாய்ப்பு
இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கொஞ்சம் வித்தியாசமானவர். அவரது எழுத்துக்கள் அனைத்தும் மிக வித்தியாசமான முறையிலும் பிரமாதமான நடையிலும் எழுதப்பட்டிருக்கும். அடிக்கடி பேஸ்புக், டிவிட்டர் மூலம் ரசிகர்களிடம் எளிமையாக பேசக்கூடியவர். சில மாதங்களுக்கு முன் ஒத்த செருப்பு என்ற படத்தை தயாரித்து இயக்கினார். முதன் முதலாக ஒருவர் மட்டுமே நடித்து வெளிவந்த படமிது.
சில வருடங்களுக்கு முன் குடைக்குள் மழை படத்தில் சிற்சில கதாபாத்திரங்களுடன் மட்டுமே நடித்திருந்தார். சமீபத்தில் வெளிவந்த ஒத்த செருப்பு படம் கணிசமாக ரசிகர்களிடம் பாராட்டு பெற்றது.
இந்த படத்தை பார்த்திபன் ஹிந்தியில் இயக்க இருக்கிறாராம் அதற்காக தகுந்த ஹிந்தி தெரிந்த நபர்கள் இந்த படத்திற்கு நல்ல ஹிந்தி டைட்டில் சொல்லுங்கள் என கூறி இருக்கிறார் பார்த்திபன்.
