நடிகர் தனுஷ் சில வருடங்களுக்கு முன் ஹிந்தியில் நடித்த படம் ராஞ்சனா. இந்த படத்தில் நடித்த பிறகு தனுஷ்க்கு ஹிந்தி படங்களில் அதிகம் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
அதன் பிறகு அமிதாப்புடன் இணைந்து ஷமிதாப் என்ற படத்தில் கூட நடித்தார்.
தற்போது அத்ராங்கி ரே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தனுசுடன் அக்ஷய்குமார் நடித்துள்ளார்.
இந்த படம் ஹிந்தியில் நல்ல வெற்றியடைந்துள்ள நிலையில் தனுசுக்கு அடுத்தடுத்த ஹிந்தி பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கிறது.
அத்ரங்கி ரே படம் வெற்றியடைந்த நிலையில் சில நாட்களிலேயே இந்தக் கூட்டணி மீண்டும் இணையும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
விரைவில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஆனந்த் எல்.ராய் உடன் மூன்றாவது முறையாக இணையும் படத்துடன், தனுஷ் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்துடன் தனது நான்காவது பாலிவுட் படத்துக்காக ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.