Latest News
ஹிஜாப் விவகாரம்- ஆர்.எஸ் .எஸ் தடை செய்யப்பட வேண்டும் திருமாவளவன்
கர்நாடக மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பித்த ஹிஜாப் பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவி அணிவோம் என மற்ற மாணவர்கள் கூறியதால் இது பெரிய பிரச்சினையாக உள்ளது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசும்போது,
ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் இயக்கத்தை தடை செய்ய வேண்டும், இசுலாமியப் பெண்கள் அரசியலமைப்புச் சட்டத்திலே உடை சுதந்திரத்தை பெற்றிருக்கிறார்கள். அதை தடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என கூறியுள்ளார்.
நான் ஓங்கி முழங்குகிறேன்!#ஜெய்பீம் !#அல்லாஹூ_அக்பர் !
(நாடாளுமன்றத்தில் இன்று நான் ஆற்றிய உரை )
ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் இயக்கத்தை தடை செய்ய வேண்டும்,
இசுலாமியப் பெண்கள் அரசியலமைப்புச் சட்டத்திலே உடை சுதந்திரத்தை பெற்றிருக்கிறார்கள். அதை தடுப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை pic.twitter.com/CwefNaGHE3— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 9, 2022
