Connect with us

உலகின் மிக வயதான நபராக இருந்தவர் மரணம்

Latest News

உலகின் மிக வயதான நபராக இருந்தவர் மரணம்

கடவுள் படைப்பில் பிறப்பு போலவே கட்டாயம் வருவது இறப்பு. இறப்பு என்பதை எந்த மனிதனாலும் தவிர்க்க இயலாது. நமது தாத்தா பாட்டிகள் 70, 80களில் வயதாகி உயிரிழந்த நிலை மாறி தற்போதெல்லாம் 60, 50லேயே உயிரிழக்கின்றனர்.

ஆனால் ஒரு சிலர் வெகு ஆச்சரியமாக நூறு வயதை கடந்தும் ஆச்சரியமாக வாழ்கின்றனர்.

ஜப்பான் நாட்டை சேர்ந்த டான் கேனகா என்ற மூதாட்டிக்கு வயது 119.  இவர் கடந்த 1903ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி பிறந்தவர். இவருக்கும் ஹிட்யூ டனகா என்பவருக்கும் கடந்த 1922ல் திருமணம் நடந்தது.

இந்த தம்பதிகளுக்கு  நான்கு குழந்தைகள் இருக்கின்றன. இவர் கடந்த  2019ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். உலகின் மிக வயதான பெண்மணி என அப்போதைய 116வது வயதில் இடம்பெற்றார்.

இந்த நிலையில் தற்போது 119வது வயதில் மரணமடைந்துள்ளார். இவரது மரணத்தை அடுத்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மற்றொரு பெண்மணி உலகின் அதிக வயதுடையவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாருங்க:  உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி படத்துக்கு கிடைத்த சான்றிதழ் என்ன தெரியுமா
Continue Reading
You may also like...

More in Latest News

To Top