Latest News
நெடுஞ்சாலைத்துறைக்கு தலைமைசெயலாளரின் வேண்டுகோள்
பொதுவாக புதிதாக சாலை போடுபவர்கள் செய்யும் தவறான வேலை ஏற்கனவே இருக்கும் சாலையை சரியாக எடுக்காமல் அதை லேசாக உடைத்து விட்டு அதற்கு மேலேயே சாலை அமைக்கும் பணியை செய்து வருவார்கள். எல்லாவற்றையும் உடைத்து ப்ரெஷ் ஆக தான் சாலை அமைக்க வேண்டுமென்றாலும் அதை சரியாக செய்வதில்லை.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை செயலாளர் இறையன்பு விடுத்துள்ள உத்தரவில் இனிமேல் சாலையின் மேல்மட்டத்தை நன்கு வழித்து உடைத்துவிட்டுதான் சாலை அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு கட்டளை இட்டுள்ளார்.
இது போல சாலை மட்டத்தை உயர்த்துவதால் வெள்ளம் போன்ற நேரங்களில் கடும் பிரச்சினைகள் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.