கோவையில் இலங்கை தீவிரவாதிகள் பதுங்கல்? – போலீசார் தீவிர சோதனை

142

இலங்கையை சேர்ந்த 5 தீவிரவாதிகள் கோவையில் நாசவேலைக்கு திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுப்பிரிவு எச்சரித்துள்ளதால் அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் உள்ள தேவாலயம் உள்ளிட்ட சில இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் பொதுமக்கள் பலரும் பலியாகினர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலைய்ல், இலங்கையை சேர்ந்த 5 தீவிரவாதிகள் கோவையில் பதுங்கியிருப்பதாகவும், விநாயகர் சதுர்த்தி அன்று நாசவேலைக்கு திட்டமிட்டிருப்பதாகவும் மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து கோவை மாநகரம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், விடுதிகள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் போலீசார் தீவிர சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களிலும் சோதனை செய்யப்படுகிறது.

பாருங்க:  சென்னையில் இரு இடத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டம்! ஒன்றுகூடியதால் பரபரப்பு!