Tamil Flash News
பெரா வழக்கை விசாரிக்க தடை – தினகரன் மகிழ்ச்சி!
டிடிவி தினகரனுக்கு எதிராக தொடரப்பட்ட பெரா வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
1996ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்க்லேஸ் வங்கி மூலம் ஒரு கோடியே 4 லட்சத்து 93 ஆயிரத்து 313 அமெரிக்க டாலரை முதலீடு செய்தது தொடர்பாக தினகரன் மீது அமலாக்கத்துறை பெரா வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும் முடிக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை தினகரனிடம் வழங்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
ஆனால், டிடிவி தினகரன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பெரா வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு, அமலாக்கத்துறையின் மனுவிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.