நீதிமன்றத்தை ஆதரித்து சூர்யா புதிய டுவிட்

நீதிமன்றத்தை ஆதரித்து சூர்யா புதிய டுவிட்

நீட் தேர்வு விசயமாக அறிக்கை வெளியிட்டு கருத்து சொன்ன நடிகர் சூர்யா நீட் தேவையற்றது என்ற ரீதியில் கருத்து சொல்லி இருந்தார். கொரோனா தொற்று உள்ள இந்த காலத்தில் நீதிபதிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் வேலை செய்கின்றனர்.

மாணவர்களை மட்டும் தைரியமாக நீட் எழுதலாம் என தீர்ப்பு கொடுக்கின்றனர் என விமர்சனம் செய்திருந்தனர். இதை எதிர்த்து ஹை கோர்ட் வக்கீல் ஒருவர் சூர்யா நீதிமன்றத்தை அவமரியாதை செய்துவிட்டதாக கடிதம் எழுதி இருந்தார்.

சில நீதிபதிகள் சூர்யாவுக்கு ஆதரவும் தெரிவித்து வந்த நிலையில் . சூர்யா நேற்று ஒர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தான் இந்திய நீதித்துறையை மதிப்பவன் என்றும். இந்திய நீதித்துறையின் மகத்துவத்தை நான் ஆழமாக உணர்ந்திருக்கிறேன். நான் எப்போதும் நீதித்துறையை உயர்ந்த மதிப்பில் வைத்திருக்கிறேன். நீதிமன்றம்தான் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலை நிறுத்த ஒரே வழியாகும் என நீதிமன்ற புகழ் பாடியுள்ளார்.