Entertainment
தொடர் கனமழை- நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர்மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை நீர் முழுவதாக வெளியேறவில்லை. இந்நிலையில் இன்று மாலை புயலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில் மழை தொடர்வதால் மேலும் ஒரு நாள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரத்தை தொடர்ந்து செங்கல்பட்டிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
