முருகன் இட்லி கடை உணவில் புழு – உரிமத்தை ரத்து செய்த அதிகாரி

224

பிரபலமான முருகன் இட்லி கடை உணவு விடுதில் வழங்கப்பட்ட மாலை உணவில் புழு இருந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாரிமுனையில் உள்ள பிரபல முருகன் இட்லி கடை உணவு விடுதிக்கு வழக்கறிஞர் ஒருவர் நேற்று உணவருந்த சென்றார். அப்போது, அவரின் உணவில் ஒரு புழு இருந்துள்ளது.இது தொடர்பாக ஹோட்டல் மேலாளிடம் அவர் கேட்டபோது சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதனால், அதை புகைப்படம் எடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ளார்.

சென்னையில் உள்ள முருகன் இட்லி கடை விடுதிகளுக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு இடத்திலிருந்தே உணவு கொண்டுவரப்படுகிறது. எனவே, அங்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள், அந்த இடத்திலிருந்து உணவு தயாரித்து விற்பனை செய்ய தடை விதித்தனர். மேலும், அந்நிறுவனத்தின் உரிமையையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

பாருங்க:  ஆசிரியர்களின் சஸ்பெண்ட் ரத்து - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு