ஆங்கிலத்தில் பிரபலமான படம் காஞ்சுரிங். காஞ்சுரிங் வரிசை படங்கள் அடுத்தடுத்த படங்கள் வெளிவந்தன. இந்த படத்தை செம ஹாரர் படம் என்பதால் பலரும் அதிகம் பயந்து உள்ளனர். தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் உள்ள தியேட்டரில் இப்படம் திரையிட்டபோது ஆந்திரமாநில நபர் ஒருவர் இப்படத்தை பார்த்து உடனே மயங்கி சுருண்டு விழுந்து இறந்தார்.
இப்படி காஞ்சுரிங்க் திரைப்படம் உலக அளவில் பல காரணங்களுக்காக புகழ்பெற்றது.இப்படத்தின் மையக்கருவாக இருந்த ஹாண்டட் ஹவுஸ் என்ற வீடு அமெரிக்காவில் உள்ளது.
இந்த வீட்டை 8 கோடியே 85 லட்சம் இந்திய மதிப்பில் கொடுத்து ஜான் ஹெய்ன்சன் என்ற தொழிலதிபர் வாங்கியுள்ளார்.
அதனை புனரமைத்து சுற்றுலா பயணிகளுக்காக திறந்து விட உள்ளார்.

