ஹாத்ராஸ் சம்பவம்- கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்

ஹாத்ராஸ் சம்பவம்- கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்

பீட்ஸா, ஜிகர்தண்டா, மெர்க்குரி, பேட்ட உள்ளிட்ட படங்களின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இவர் அடிக்கடி சமூக பிரச்சினைகளுக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் காட்டமாக எழுதுவார் அதை வெளிப்படுத்துவார்.

சமீபத்தில் உபியில் ஹாத்ராஸ் என்ற இடத்தில் ஒரு தலித் பெண் கடுமையான முறையில் சில மனித மிருகங்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

கற்பழிப்புக்கு முன் அந்த பெண்ணை பல சித்ரவதைகள் செய்து அந்த பெண்ணை வதைத்துள்ளனர். இந்த கொலை நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கார்த்திக் சுப்புராஜ் இதை கண்டித்து ஒரு டுவிட் இட்டுள்ளார்.

காட்டுமிராண்டித்தனமான விலங்குகள் நிறைந்த மிகவும் பாதுகாப்பற்ற இடத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் … மனிதநேயத்திற்கு நம்பிக்கை இல்லை … ஹாத்ராஸ் சிறுமிக்கு நடந்த சம்பவங்களும் அதை நிரூபிக்கின்றன.

எனவே மிகவும் கொடூரமான மற்றும் சோகமான சூழலில் இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார் இவர்.