Latest News
தேவை இல்லாமல் அடித்தவரை முட்டி தூக்கி வீசிய காளை
நம் மனிதர்களின் பெரும்பான்மை குணமே அமைதியாக இருக்கும் மிருகங்களை துன்புறுத்துவதுதான். தெருவில் திரியும் நாயை தேவை இல்லாமல் கல் விட்டு எறிவது. பன்றியை அடிப்பது என தேவை இல்லாத வேலைகளில் ஈடுபடுவார்கள். அவைகளும் உணர்வு உயிர்தானே நமக்கு வலிப்பது போல் அதற்கும் வலிக்கும் என நினைத்து பார்ப்பதில்லை.
இப்படியாக தேவையில்லாமல் காளையை அடித்த முதியவர் ஒருவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளானார். ஹரியானாவில் அமைதியாக நின்று கொண்டிருந்த காளையை ஒரு முதியவர் தேவையில்லாமல் சென்று ஒரு குச்சியை எடுத்து அடிக்க வெகுண்டெழுந்த அந்த காளை அவரை தூக்கி வீசி விட்டது. இந்த காட்சி வைரலாகி வருகிறது.
