ஹரியானாவில் பட்டாசு தடை நீக்கம்

ஹரியானாவில் பட்டாசு தடை நீக்கம்

தீபாவளி என்றாலே பட்டாசுதான் பட்டாசு இல்லாமல் கொண்டாடப்படும் தீபாவளியை நினைத்து பார்க்கவே முடியாது. இப்படி இனிமையாக கொண்டாடி கொண்டிருந்த தீபாவளி திருநாள் கடந்த சில வருடங்களாக பட்டாசு வெடிக்க கூடாது என அரசு மற்றும் நீதிமன்றம் போடும் உத்தரவுகளால் களை இழந்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த வருடம் ராஜஸ்தான் அரசு பட்டாசு வெடிக்க கூடாது என உத்தரவு போட்டுள்ளது. இதை பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் ஹரியானா அரசும் கொரோனோ நோயாளிகளுக்கு பட்டாசால் பிரச்சினை ஏற்படுகிறது என பட்டாசுக்கு தடை விதித்தது.

இதை தொடர்ந்து பலரும் எதிர்த்த நிலையில் ஒரு சிறிய தளர்வாக இரவு 8மணி முதல் 10மணி வரை மட்டும் பட்டாசு வெடித்துக்கொள்ளலாம் என புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாரியா.