உலகத்தை உலுக்கி கொண்டிருந்த கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை மரண பீதியில் ஆழ்த்தி விட்டது. கடந்த சில நாட்களாகத்தான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு வர துவங்கியுள்ளனர்.
கொரோனாவுக்கு பல நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியிலும், தமிழக முதல்வர் எடப்பாடி மதுரையிலும் துவக்கி வைத்தனர்.
மதுரையில் முதல் தடுப்பூசியை கொரோனா மெடிக்கல் கவுன்சில் தலைவர் செந்திலுக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மூன்று முறை தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், முதல் கொரோனா தடுப்பூசி மெடிக்கல் கவுன்சில் தலைவர் செந்திலுக்கு செலுத்தப்பட்டது!#NewsJ | #CoronaVaccine | #coronavirus | #EdappadiPalaniswami | #NewsUpdate | pic.twitter.com/OXl7SlX3Ku
— NewsJ (@NewsJTamil) January 16, 2021
https://twitter.com/NewsJTamil/status/1350320251943063554?s=20