உலகம் முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்படும் காதலர் தினம் சில வருடங்களாக இந்தியாவிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிப்ரவரி 14ம் தேதி உலக காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
வேலண்டைன்ஸ் டே என சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
காதலித்து வரும் காதலர்கள் அனைவரும் தங்கள் வேலைகள் மற்றும் அன்றாட அலுவல் பணிகளுக்கு ஓய்வு கொடுத்து விட்டு பார்க், பீச் என சுற்றி வருவார்கள்.
காதலிப்பவர்கள் மட்டுமல்ல கல்யாணம் முடித்தவர்களும் தங்கள் மனைவியை நேசிக்கிறேன் என சுற்றுலா இடங்களில் மனைவியுடன் பவனி வருவார்கள்.
ரோஜாப்பூக்களை பகிர்வதும் விலை உயர்ந்த கிப்ட்களையோ அல்லது தங்களால் இயன்ற கிப்ட்களையோ தங்கள் மனம் கவர்ந்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வதே காதலர் தினத்தின் முக்கிய அம்சம் ஆகும்.