Entertainment
இனிதே பிறந்தது தமிழ்ப்புத்தாண்டு
இன்று இனிதே பிறந்துள்ளது தமிழ்ப்புத்தாண்டு. பொதுவாக தமிழர்கள் கொண்டாட வேண்டிய புத்தாண்டு என்று பார்த்தால் அது தமிழ்ப்புத்தாண்டுதான்.
ஆங்கிலப்புத்தாண்டு என்பது ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்ட காலத்தில் நாம் பழகிக்கொண்டதாகும்.
தமிழ்பேசும் மக்களுக்கு தமிழ்ப்புத்தாண்டும், மலையாளம் பேசும் மக்களுக்கு விஷு கனி திருநாளும், தெலுங்கு பேசுபவர்களுக்கு உகாதி திருநாளும்தான் முக்கிய புத்தாண்டு ஆகும்.
இன்று தமிழ்ப்புத்தாண்டின் சுபகிருது வருடம் பிறக்கிறது. இந்த நன்னாளில் உலக மக்கள் நோய் நொடிகள் இன்றி, தீவிரவாதம் இன்றி அமைதியான அழகான முறையில் வாழவும் , கொடும் தொற்றுகள் நம்மை அண்டாமல் இருக்கவும் , பொருளாதார ரீதியாக அனைவரும் பலம் பெறவும் , உலக உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ இறைவனை வணங்குவோம்.