இயக்குனர் பாலச்சந்தரின் பயிற்சிப்பாசறையில் இருந்து வந்தவர் நடிகர் விவேக். பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதிவேண்டும் படத்தில் சுகாசினியின் அப்பாவி ஏழைத்தம்பியாக நடித்து மனதை கொள்ளை கொண்டவர் விவேக்.
தலைமைசெயலகத்தில் அலுவலராக இருந்துக்கொண்டே ஆரம்பகாலங்களில் விவேக் நடித்து வந்தார். புதுப்புது அர்த்தங்கள் படம் வரை இது தொடர்ந்தது.
இப்படத்தில் விவேக் செய்த இன்னிக்கு செத்தா நாளைக்கி பால் காமெடி புகழ்பெற்றது. இந்த படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட விவேக் தொடர்ந்து சில படங்களில் நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தினார்.
90களுக்கு பிறகு கொஞ்சம் பகுத்தறிவு கலந்து விவேக் பேசிய காமெடிகள் திரையில் வரவேற்பு பெற்றன. முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தார். பல படங்களில் கல்லூரி மாணவராகவே நடித்தார்.
நடிப்பில் பல முத்திரை பதித்த நடிகர் விவேக் சமீபகாலமாக முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த அப்துல் கலாம் அவர்களின் அறிவுரையை ஏற்று தொடர்ந்து மரக்கன்றுகளாக நட்டு வருகிறார்.
தினமும் ஏதாவது ஒரு பள்ளியிலோ அல்லது பொது இடங்களிலோ தனது டிரஸ்ட் மூல மரக்கன்று நடுவதில் கவனம் செலுத்தி வருகிறார் விவேக்.
இன்று அவரின் பிறந்த நாள் தினமாகும்.