ஹன்சிகாவின் மஹா டீசர் தேதி அறிவிப்பு

ஹன்சிகாவின் மஹா டீசர் தேதி அறிவிப்பு

ஹன்சிகா நடித்திருக்கும் படம் மஹா. இப்படத்தில் ஆரம்பத்தில் வந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. ஹன்சிகா சிகரெட் குடிக்கும் காசி பேக்ரவுண்டில் இப்பட போஸ்டர் வெளியானது.

ஜமீல் என்பவர்  இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது.

நடிகர் சிம்பு கௌரவத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கரோனா நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடியில் வெளியிடத் தயாரிப்பு தரப்பு முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால்  இயக்குநர் ஜமீல் அதிருப்தியடைந்தார், படத்தை ஓடிடியில் வெளியிடத் தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதற்கு தயாரிப்பாளர் மதியழகனும் விளக்கம் அளித்திருந்தார். இதையடுத்து இப்படம் எப்போது வெளிவரும் என எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இப்படத்தின் டீசர் வரும் ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.