cinema news
தம் அடித்த ஹமாம் சோப் பெண்மணி- கலாய்த்த ரசிகர்கள்
பெண்ணுக்கு வீரம் ஊட்டுவது போல் தயாரிக்கப்பட்டிருந்த ஹமாம் சோப் விளம்பரத்தில் நடித்தவர் இவரது உண்மையான பெயர் மேகா ராஜன். இவர் அமேசான், ஹமாம் உள்ளிட்ட பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.
இவர் புகைபிடிப்பது போல் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஹமாம் சோப் விளம்பரத்தில் அச்சமில்லை அச்சமில்லை ஓடு என்று சொல்லிவிட்டு இப்படியா செய்வது என பலரும் இவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக போட்டு குவிக்கின்றனர்.
இவர் 2000-ல் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியின் ஃபைனலிஸ்ட் ஆவர். ஆரம்பத்தில் இவர், மும்பையில ஜெட் ஏர்வேஸின் கேபின் க்ரூவில் பணியாற்றியவர். மேலும், இவர் வாய்ஸ் ஓவர் க்ரூவில் பணியாற்றியுள்ளார் . அதே போல கீதா கைலாசம் என்ற நாடகத்தையும் இயக்கி இருக்கிறார். இவருக்கு சீரியல்களில் நடிக்க கூட எக்கச்சக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், இவர் தான் சீரியலில் நடிக்க ஆர்வம் காட்டவில்லையாம்.