கமல்ஹாசன் குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டது – ஹெச்.ராஜா கண்டுபிடிப்பு

230
கமல்ஹாசன் குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டது - ஹெச்.ராஜா கண்டுபிடிப்பு

இந்தியன் என்கிற அடையாளமே போதும். இந்து என்கிற அடையாளமே நமக்கு தேவையில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து பற்றி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே என கமல்ஹாசன் கூறியதை அடுத்து, பாஜகவினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கமல்ஹாசன் பற்றி கருத்து தெரிவித்த ஹெச்.ராஜா “கிறிஸ்துவன், இஸ்லாமியர் என்ற அடையாளம் தேவையில்லை. இந்தியர் என்கிற அடையாளமே போதும் என கமல் கூற முடியுமா? இந்துக்களை மட்டும் அவர் அடையாளம் வேண்டாம் எனக்கூறுவது இந்துக்கள் மீது அவருக்குள்ள வெறுப்பை காட்டுகிறது. கமல்ஹாசன் குடும்பமே கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டது. அவரின் சகோதரர் சந்திரஹாசன் இறந்த போது அவரது உடல் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அதேபோல், சாருஹாசனும் கிறிஸ்துவ அமைப்புக்காக வேலை செய்து வருகிறார்” என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பாருங்க:  மூன்று வேடம்.. சயின்ஸ் பிக்‌ஷன்.. சந்தானத்தின் புதிய பட அப்டேட்