சமீபத்தில் கடலூர் மாவட்டம் கடலூர் அருகேயுள்ள தென் திட்டை கிராம ஊராட்சி தலைவரை ஊராட்சி கூட்டத்தின்போது கீழே அமர வைத்து பேச வைத்துள்ளனர். ஊராட்சி துணைத்தலைவரே மேலே உட்கார்ந்திருக்க, பெண் தலைவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால் ஜாதியை காரணம் காட்டி கீழே உட்கார வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரங்கள் பத்திரிக்கை மீடியாக்கள் வாயிலாக அனைவரிடத்திலும் சென்று சேர்ந்தது. வழக்கமாக எல்லா விசயத்திற்கும் வாயை திறக்கும் திமுகவினர் வாயே திறக்கவில்லை, திமுக கூட்டணி கட்சியினரான விடுதலை சிறுத்தைகளும் இதற்கு வாயை திறக்கவில்லை. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் அந்த பெண் ஊராட்சி தலைவரை கீழே உட்கார சொன்ன ஊராட்சி துணைத்தலைவர் திமுகவை சேர்ந்தவர் ஆவார்.
இந்த விசயத்தை குறிப்பிட்டுள்ள ஹெச்.ராஜா ஆனால் ஆச்சரியம் திருமாவளவன் ஏன் கண்டிக்கவில்லை. வீரமணி, சுப.வீ போன்றவர்கள் எங்கே. அந்த திமுக துணைத்தலைவர் ஈ.வெ.ரா வால் பண்படுத்தப் பட்டவரா? ஊடகங்கள் விவாதிக்கவல்லையே ஏன். புரிகிறது இதில் திமுக குற்றவாளி அதனால் தான். Guided media. என மீடியாக்களை சாடியுள்ளார்.