கடந்த 30.10.2020 அன்று தேவர் ஜெயந்தி விழா இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கதேவர் பிறந்த பசும்பொன்னில் நடைபெற்றது. எல்லாவிதமான தலைவர்களும் முத்துராமலிங்கத்தேவர் சமாதிக்கு சென்று அவரை வணங்கி செல்வர். பாரதிய ஜனதாவை சேர்ந்த ஹெச்.ராஜா அவர்களும் தேவரின் நினைவிடத்திற்கு சென்று அவரை வணங்கினார்.
இதை பிரபல இணையதளமான தேட்ஸ்தமிழ் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இது போல கையெடுத்து வணங்க மாட்டார்கள் என தவறாக திரித்து செய்தியை வெளியிட்டது.
இதை கண்ட ஹெச்.ராஜா இதுபோல செய்தியை வெளியிட்ட தேட்ஸ் தமிழ் இணையதளம் மீது வழக்கு தொடரப்படும் என தெரிவித்துள்ளார். தான் கையெடுத்து கும்பிடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதை பிராமணர்கள் சங்கமான தாம்ப்ராஸும் கண்டித்துள்ளது.
வேண்டுமென்றே பொய்யான செய்தியை பதிவிட்ட @thatsTamil மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பொய் செய்தித்தளம் @thatsTamil வை புறக்கணிப்போம். https://t.co/yRkM187hoW pic.twitter.com/WzdsdMy4a8
— H Raja (@HRajaBJP) November 3, 2020