நேற்று பாபர் மசூதி வழக்கின் முக்கிய தீர்ப்பு வெளியானது. அதில் பாபர் மசூதி வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக சொல்லப்பட்ட அத்வானி, முரளி மனோகர் ஜோசி, உமாபாரதி உள்ளிட்ட பலர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து அரசியல் தலைவர்கள் பலரும் இது அநீதி என கருத்து தெரிவித்து வருகின்றனர்.வைகோவும் தன் பங்குக்கு இது மிகவும் அநீதியான செயல் இது அனைவரையும் விடுதலை செய்தது நீதியின் முரண்களை இடித்ததற்கு சமம் என வை .கோ கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா ஆமாம் எந்த ஆவணங்களும் இன்றி கள்ளத்தனமாக அந்நிய நாட்டிற்கு சென்றது அரசியல் சட்டத்தை இடித்ததற்கு சமம் இல்லையா? என வைகோவிடம் கேட்டுள்ளார்.