Entertainment
ஜிவி பிரகாஷை பாராட்டிய வசந்தபாலன்
வெயில் படத்தின் மூலம் ஜிவி பிரகாஷை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் வசந்தபாலன். வெயில் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் பாடல்கள் ஆகி ஜிவிக்கு நல்லதொரு சினிமா அந்தஸ்தை பெற்று கொடுத்தது.
தற்போது அர்ஜூன் தாஸ் நடிப்பில் ஒரு புதிய படத்தை வசந்தபாலன் இயக்குகிறார். இப்படத்திற்கு ஜிவிபி இசையமைக்கிறார். இவர் கூறியதாவது,
16 வயதில் ஜீவியின் கையைப் பிடித்து வெயில் படத்திற்கு இசையமைக்க அழைத்து வந்தேன். இன்று அசுர உழைப்பால் தமிழின் முக்கியமான இசையமைப்பாளராய் , இளம் கதாநாயகனாய் எழுந்து நிற்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க இசைந்த ஜீவியின் அன்புக்கு ஆயிரம் பூங்கொத்து என வசந்தபாலன் கூறியுள்ளார்.
