Entertainment
இப்படிலாம் கவிதை எழுதி ப்ரபோஸ் பண்ணுவாங்களா?- ஜிவி பிரகாசுக்கு கவிதை எழுதி ப்ரபோஸ் செய்த ரசிகை
ஜிவி ப்ரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் மருமகனாக இருந்தாலும் தனக்கென தனி பாணியில் அழகாக இசையமைத்து வருபவர்.
இசையோடு மட்டுமல்லாமல் எண்ணற்ற படங்களில் நடிக்கவும் செய்து விட்டார் இவருக்கு பெண் ரசிகைகளும் அதிகம்.
இவரின் தீவிர பெண் ரசிகை ஒருவர், ஒன்னு வாடகை குடுங்க, இல்லன்னா காலி பண்ணுங்க… நீங்க பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம ரொம்ப வருசமா என் மனசுல குடியேறி அட்டகாசம் பண்றதெல்லாம் அநியாயம் டார்லீங் என டுவிட்டரில் இவரை பற்றி கூறியுள்ளார்.
