cinema news
ஜிவி பிரகாஷின் புதிய ஆல்பத்தை வெளியிட இருக்கும் தனுஷ்
கொரோனா வைரஸ் தாக்கத்தால் திரைப்பட வெளியீடு, ஆடியோ லாஞ்ச் என எதுவுமே இல்லாமல் கடந்த 6 மாத காலமாக முடங்கி கிடக்கிறது.கடந்த 10 நாட்களாகத்தான் ஒரு சில தளர்வுகளுக்கு பிறகு சினிமாக்காரர்களும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் இசை ஆல்பம் ஒன்று விரைவில் வெளிவர உள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் சகோதரி ஏ.ஆர் ரைஹானாவின் மகனான ஜிவி பிரகாஷ், ‘ஜெயில் உட்பட பல புதிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இசையமைத்துள்ள கோல்டு நயிட்ஸ் என்ற இன்டர்நேஷனல் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட உள்ளார். செப்டம்பர் மாதம் 17ம் தேதி இந்த ஆல்பம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆல்பத்தை பிரபல நடிகர் தனுஷ் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
My first international English single will be released by my favorite people … @dhanushkraja will release #HighandDry on September 17th on his social media platforms 💫✨ @JuliaGartha @randy_merrill pic.twitter.com/p5ltGKNsWY
— G.V.Prakash Kumar (@gvprakash) September 7, 2020