Connect with us

ஜிவி பிரகாஷின் ஐங்கரன் எப்படி உள்ளது

cinema news

ஜிவி பிரகாஷின் ஐங்கரன் எப்படி உள்ளது

ஜிவி பிரகாஷின் படங்கள் தான் கடந்த சில வருடங்களாகவே வாரத்துக்கு ஒரு படம் ரிலீஸ் ஆகி வருகிறது. சில மாதங்களாக கொரோனா லாக் டவுன், மற்றும் பல படங்கள் வராமல் முடங்கி இருந்தது.

தற்போது ஒவ்வொரு படமாக ரிலீஸ் ஆகி வருகிறது. 2015ல் ரவியரசு என்பவர் இயக்கிய ஈட்டி திரைப்படத்தை பார்த்து இருப்பீர்கள். அந்த ரவியரசுதான் ஐங்கரன் படத்தையும் இயக்கியுள்ளார்.

ஈட்டி படத்தில் விளையாட்டை மையப்படுத்தி கதை அமைத்திருப்பார். அது போலவே இந்த படத்தில் விஞ்ஞானத்தை மையப்படுத்தி கதை அமைத்துள்ளார்.

இளம் விஞ்ஞானியான ஜிவி பிரகாஷின் பல கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் அலைகிறார். ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்பதற்காகவும் கருவியை கண்டுபிடிக்கிறார்.

இதற்கிடையே வைரத்தை கொள்ளையடிக்கும் கொள்ளை கும்பலை தனது விஞ்ஞான முயற்சியால் ஜிவி கண்டுபிடிக்கிறார். இதை அடிப்படையாக கொண்டு கதை நகர்கிறது.

பரபரப்பும் விறுவிறுப்பும் கலந்த கதையாக நன்றாக இருக்கிறது. சில இடங்களில் தொய்வு இருந்தாலும் வேகமாக நகரும் கதைதான் இது. ஒரு முறையாவது கண்டிப்பாக பார்க்கலாம்.

படம் நாமக்கல் நகரை சுற்றி எடுக்கப்பட்டுள்ளது.

More in cinema news

To Top