Connect with us

`மாறும் குருப்பெயர்ச்சி எதை செய்தால் நன்மை கிடைக்கும்

Latest News

`மாறும் குருப்பெயர்ச்சி எதை செய்தால் நன்மை கிடைக்கும்

குரு பெயர்ச்சி நேரத்தில் செய்ய வேண்டியது என்ன?

குரு பகவானை சுபக்கிரகம் என்று கூறுகிறோம்.

சனி பகவானை பாவகிரகம் என்று கூறுகிறோம் .

ஏன் தெரியுமா ?

குருபகவான் ஒரு ராசிக்கு நல்ல இடங்களுக்கு வரும்போது(ராசிக்கு 2,4,5,7,9,11) நன்மைகளை வாரி வழங்குவார்!

அதே குருபகவான் ஒரு ராசிக்கு கெட்ட இடங்களுக்கு வரும்போது(ராசிக்கு 1,3,6,8,12) தீமை செய்ய மாட்டார் நன்மை செய்வதை குறைக்க மட்டும் செய்வார் !!!அதனால்தான் அவரை சுபகிரகம் என்று நாம் கூறுகிறோம்.

சனி பகவான் ஒரு ராசிக்கு கெட்ட இடங்களுக்கு வரும்போது (ராசிக்கு 3,6,5,9,11)நன்மைகளை வாரி வழங்குவார்.

அதே சனி பகவான் நல்ல இடங்களுக்கு வரும்போது(ராசிக்கு 12,1,2,4,7,8) தீமைகளை வாரி வழங்குவார் .

அப்படி தீமைகளை வாரி வழங்கும்போது அவருடைய சொந்த விருப்பத்தின்படி யாருக்கும் எந்த தீமையையும் தர முடியாது.

போன நான்கு பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையில் துயரங்களையும் வேதனைகளையும் வறுமையையும் அவமானத்தையும் மட்டுமே அவரால் தர முடியும்.

அதனால் தான்,அவரை பாவ கிரகம் என்று நாம் கூறுகிறோம்.

ஏனென்றால் நவக்கிரகங்கள் அனைவரும் காலா தேவன் என்று சொல்லக்கூடிய காலபைரவரின் கட்டுப்பாட்டில் இயங்கி கொண்டிருக்கின்றன .

இருந்தபோதிலும் சராசரி மனித வாழ்க்கை மிகுந்த சிக்கல்கள் நிரம்பிய நிரம்பியதாக இருக்கிறது.

ஓரளவு பக்தியாக இருப்பவர்களுக்கு குருப் பெயர்ச்சி சனிப் பெயர்ச்சியால் வரும் துயரங்களை பாதிக்கு மேல் குறைக்க முடியும் என்று சித்தர்களுடைய உபதேசம் நமக்கு தெரிவிக்கின்றன.

தமிழ் பேச எழுதத் தெரிந்த அனைவரும் தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் சித்தர் ஒருவருடைய பரம்பரையில் பிறந்தவர்கள்தான்!!!

பாருங்க:  ரேஷ்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நம்முடைய இந்து தமிழ் பண்பாடு பற்றிய அடிப்படை உண்மைகளில் ஒரு சிலவற்றையாவது தினமும் பின்பற்றி வருவதன் மூலமாக நம்முடைய முன்னோர்களாகிய சித்தர்கள் ஆசீர்வாதம் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

14.4.2022 வியாழக்கிழமை அன்று அதிகாலை 4.15 மணிக்கு குரு பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

இதனால் மகர ராசி,மிதுன ராசி,சிம்ம ராசி,துலாம் ராசி அன்பர்களுக்கு பண நெருக்கடி ஒரு ஆண்டிற்கு உண்டாகும் .

மேஷம் ராசி அன்பர்களுக்கு நன்மையும் தீமையும் சேர்ந்தே உண்டாகும்.

தனுசு ராசிக்கு பாதி நன்மை உண்டாகும்.

ருஷபம் ராசி,கடக ராசி,கன்னி ராசி,விருச்சிக ராசி,கும்ப ராசி அன்பர்களுக்கு முழு பண வரவு அதிகரிக்கும்.எந்த சிக்கலையும் குரு பார்வையால் ஏப்ரல் 2023 வரை சமாளித்து விடலாம்.

மகர ராசி மேஷ ராசி மிதுன ராசி சிம்ம ராசி துலாம் ராசி அன்பர்கள் குருபெயர்ச்சி ஆகும் நேரத்தில் பின்வரும் குரு பகவானுடைய பிராண தேவதை மந்திரத்தை ஒரு மணி நேரம் ஜெபிக்க வேண்டும் இந்த ஒரு மணிநேர ஜெபம் அடுத்த ஒரு வருடத்திற்கு (ஏப்ரல் 2023 வரை) பண நெருக்கடியை குறைத்து குருபகவானின் அருளை கொடுப்போம்.

14.4.2022 வியாழக்கிழமைஅன்று அதிகாலை 3.45 முதல் 4.45 வரை

ஓம் ஹ்ரீம் பம் அசிதாங்க பைரவாய நமஹ

கண்டிப்பாக முதல் நாள் 13.4.2022 புதன் கிழமையும் 14.4.2022 வியாழக்கிழமை யும் அசைவம் சாப்பிடாமல் இருந்திருக்க வேண்டும்.மது அருந்தாமல் இருந்திருக்க வேண்டும்.அப்படி இருந்து இந்த குரு பகவானின் பிராண தேவதை மந்திரத்தை ஜெபித்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.

பாருங்க:  தி லெஜண்ட் படம் பேன் இந்தியா படமா?

சிவராஜயோக ஜோதிடர்

வீரமுனி சுவாமிகள்

9092116990 (வாட்ஸ் அப் மட்டும்)

ராஜபாளையம்.

More in Latest News

To Top