Entertainment
குருத்வாரா முன் புகைப்படம்- எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட மாடல் அழகி
பாகிஸ்தானில் புகழ்பெற்ற கர்தார்புர் குருத்வாரா உள்ளது. சீக்கியர்களால் மிக முக்கிய புனித தலமாக இது பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து இங்கு அதிகமானோர் இங்கு புனிதா சுற்றுலா சென்று வருகின்றனர்.
இந்த குருத்வாராவுக்கு பாகிஸ்தானின் பிரபல மாடல் அழகி சவுலேஹா சென்றார். அங்கு சுற்றிப்பார்த்த அவர் குருத்வாரா முன் மாடர்னாக ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. இந்த புகைப்படத்துக்கு சீக்கிய அமைப்புகள் கடும் கண்டனம் எழுப்பியது. இந்தியாவில் அகாலி தளம் கட்சி இதற்கு கடும் கண்டனம் கொடுத்தது.
இதையடுத்து சமூக வலைதளங்களில் இருந்து அவற்றை நீக்கியுள்ள சவுலேஹா. யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அதை வெளியிடவில்லை. என் பயண நினைவுகளுக்காகவே புகைப்படம் எடுத்தேன் அதை நீக்கி விடுகிறேன். யாரையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் என சவுலேஹா கூறியுள்ளார்.
