நவக்கிரகங்களில் சுபகாரகத்துவம் அதிகம் உள்ள கிரகம் குரு. இந்த குரு பார்த்தால் கோடி நன்மை என்பது ஜோதிட வாக்கு குரு எந்த ராசியை பார்த்தாலும் அவர்களுக்கு நன்மைகள் அதிகம் உண்டாகும். குருபகவான் இல்லாமல் மனிதனின் வாழ்க்கையில் நல்ல விசயங்களே இல்லை என கூறலாம் குருதான் வாழ்வின் முன்னேற்றம் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு பெரும்பாலும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
ஒரு வருடத்துக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி வருகிறது தற்போது தனுசு ராசியில் சஞ்சரித்து வரும் குரு இன்று இரவு மகர ராசிக்கு ஜென்ம குருவாக வருகிறார். குருப்பெயர்ச்சியை முன்னிட்டு தமிழ்நாட்டின் குரு பரிகார ஸ்தலங்களில் முக்கியமானதாக கருதப்படும் ஆலங்குடியில் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கு தெட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி காட்சி தருகிறார். குருவின் அம்சமான இவரை வணங்கினால் அனைத்தும் நன்மையாகும் என்பது ஆன்றோர் வாக்கு.
இன்று இரவு வாக்கிய பஞ்சாங்கப்படி இரவு 9.36 மணிக்கு குருப்பெயர்ச்சி ஆகிறார். இதனால் ஆலங்குடி, திருச்செந்தூர், திட்டை, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் உள்ளிட்ட இடங்களில் குருவுக்கு விசேஷ வைபவங்கள் நடக்க இருக்கிறது.