Connect with us

Latest News

கிராம கோவிலில் இருந்த மர்ம துப்பாக்கி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஆளிப்படியில் ஒரு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜைகள் முடித்து கோவிலை பூட்டி விட்டு சென்ற பூசாரி திரும்ப வந்து அடுத்த நாள் கோவிலை திறந்த உடன் ஒரு துப்பாக்கியும் அதற்குரிய உறையும் இருந்தது.

அதிர்ச்சியைடைந்த அவர் காவல்துறையிடம் தெரிவித்தார்.போலீசார் அந்த துப்பாக்கியையும் உறையையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட அந்த துப்பாக்கியை வெளிமாநிலத்தில் இருந்து வாங்கி வந்துள்ளனர்.

ஆனால் இந்த கோவிலில் ஏன் விட்டுசென்றனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

பாருங்க:  நின்று போனதா நடிகர் விஷால் - அனிஷா ரெட்டி திருமணம்? - இதோ ஆதாரம்...

Latest News

டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி

டெல்லியில் உள்ளது புகழ்பெற்ற ரோகிணி கோர்ட். இந்த கோர்ட் வளாகத்தில் இன்று திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் பலரும் சிதறி ஓடினர்.

இங்குள்ள கோர்ட் எண் அறை 207 அருகே பரபரப்பாக துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. அப்போது அனைவரும் சிதறி ஓடினர்.

முழு தகவல் கிடைக்காத நிலையில் இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையை போக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடி ஜிதேந்தர் கோகி என்பவனுடன் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாருங்க:  தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு! எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்?
Continue Reading

Latest News

தனது காருக்காக பெரும் தொகை செலவு செய்த நடிகர்

ஆந்திர முன்னாள் முதல்வரும் நடிகருமாக விளங்கிய என்.டி ராமாராவின் பேரன் ஜூனியர் என்.டி.ஆர் இவரின் படங்களுக்கு என ஆந்திராவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். முன்னணி நடிகராக தெலுங்கு திரையுலகில் விளங்கும் ஜூனியர் என் டி ஆர் ஒரு லம்போகினி கார் வாங்கியுள்ளார்.

இந்த காரின் மதிப்பு ரூ 3 கோடி. இந்த காருக்காக 9999 என்ற பேன்சி நம்பரை வாங்கியுள்ளார், இந்த நம்பருக்காக அவர் 17 லட்சம் செலவு செய்துள்ளாராம்.

பாருங்க:  நடிகர் மோகனின் பிறந்த நாள் இன்று
Continue Reading

Latest News

தமிழக அரசு ஏசி பேருந்துகள் இயங்கும் தேதி தெரியுமா

தமிழக அரசுக்கு சொந்தமாக வெளியூர் செல்லும் வகையில் நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன.

கடந்த மே மாதத்தில் இருந்து கொரொனா தொற்று காரணமாக லாக் டவுன் உள்ளிட்ட காரணங்களால் பெரும்பாலும் பஸ்கள் இயங்கவில்லை. பின்பு பஸ்கள் சிறிது சிறிதாக இயங்க அனுமதி அளிக்கப்பட்ட போதும் வெளியூர் செல்ல ஏசி பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஏசி பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அன்றிலிருந்து ஏசி பேருந்துகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.

பாருங்க:  சொந்தக்குரலில் ஏன் பேசவில்லை- லால் விளக்கம்
Continue Reading

Trending