சிறுவர்களின் சண்டையில் பலியான தாத்தா

24

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பக்கிட்மாநகரம் என்ற இடத்தை சேர்ந்த சிறுவன் இர்பான்.  இவர் பள்ளி சிறுவர்களுடன் சேர்ந்து அடிக்கடி சண்டை போடுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த செவ்வாயன்று நடந்த தகராறில் இர்பான் உள்ளிட்ட சிறுவர்கள்  பயங்கரமாக மோதி கொண்டனர்.

அப்போது இர்பானின் தாத்தா சர்புதீன் சித்தப்பா செய்யது அலி ஆகியோர் சண்டையை விலக்கி விட சென்றனர் அப்போது சிறுவர்கள் பிடித்து தள்ளியதில் சிறுவனின் தாத்தா சர்புதீன் மயங்கி விழுந்துவிட்டார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாருங்க:  தனுஷ் நடிக்கும் கர்ணன் படப்பிடிப்பு நிறைவு