டிக் டாக் பிரபலமான ஜிபி முத்து தற்கொலை முயற்சி

டிக் டாக் பிரபலமான ஜிபி முத்து தற்கொலை முயற்சி

ஏலே செத்த பயல்களா நாரப்பயலுகளா என்ற வார்த்தைகளை அடிக்கடி பேசி டிக் டாக் மூலம் பிரபலமானவர் ஜி.பி முத்து. இவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் இவர்.

இரண்டு வருடங்களாக இவர் சமூக வலைதளங்களில் பிரபலம். உடன் குடியில் மரக்கடை வைத்திருக்கும் இவர் அதிக நேரம் டிக் டாக்கிலேயே மூழ்கி இருந்ததாக செய்திகளை அடிக்கடி காணாதவர்கள் இருக்க முடியாது.

டிக் டாக் பிரபலமான சூர்யாவையும் இவரையும் கலாய்த்து , இணைத்து அதிக செய்திகள் வந்தன. இருவரும் இணைந்தே பேட்டியும் கொடுத்தனர்.

சமீபத்தில் டிக் டாக் தடை செய்யப்பட்டதற்கு கடும் வருத்தம் தெரிவித்து இவர் வீடியோவும் வெளியிட்டார். டிக் டாக் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என மனம் உருக பேசினார். இந்நிலையில் இவர் இன்று இவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

என்ன காரணம் என தெரியவில்லை வயிற்றுவலியால் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.