கெளதம் கார்த்திக் செல்ஃபோனை பறித்த திருடர்கள் கைது

கெளதம் கார்த்திக் செல்ஃபோனை பறித்த திருடர்கள் கைது

நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். கடல் படத்தில் அறிமுகமாகி, ஹர ஹர மகாதேவகி, தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் இவர் தொடர்ந்து நடித்தார்.

இவர் கடந்த

டிசம்பர் 2ம் தேதி அன்று காலையில் ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டார்  அப்போது கவுதம் கார்த்திக்கை தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரின் விலை உயர்ந்த செல்போனை பறித்து சென்றனர்.

இதனையடுத்து இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மயிலாப்பூர் போலீசார், செல்போனை பறித்துச்சென்ற 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மயிலாப்பூரில் குயில் தோட்டத்தைச் சேர்ந்த 17வது சிறுவன் மற்றும் பெரும்பாக்கத்தை சேர்ந்த சரத் ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

அத்துடன் திருடப்பட்ட செல்போனை விலைக்கு வாங்கியதாக ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவரையும் போலீஸார் கைது செய்தனர்.