பாஜக எம்.பி.யும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் . இவர் தற்போது கிரிக்கெட் விளையாடுவதில்லை அதில் இருந்து ஓய்வு பெற்று கிழக்கு டெல்லி தொகுதியில் வெற்றிபெற்று பாஜக கட்சியின் எம்.பி,யாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் . ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் என்ற பயங்கரவாத அமைப்பிடமிருந்து கவுதம் கம்பீர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து கொலை மிரட்டல் இமெயில் வந்துள்ளது.
இந்த கொலை மிரட்டல் இமெயில் தொடர்பாக கவுதம் கம்பீர் சார்பில் டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கம்பீர் இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.