Latest News
தமிழ்நாடு கவர்னருக்கு எதிராக நீதிபதி சந்துரு கேள்வி
நீட் தேர்வை எதிர்த்து நீண்ட நாட்களாக திமுக அரசு போராடி வருகிறது. நீட் தேர்வு தவறானது என தொடர்ந்து வாதிட்டு வருகிறது. இந்த நிலையில் தாங்கள் ஆட்சி அமைத்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என சொல்லி இருந்தது.
இருப்பினும் நீட் தேர்வு விசயத்தில் மத்திய அரசு பிடி கொடுக்காததால் திமுக மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் நீட் தேர்வு மசோதாவை நிறைவேற்ற ஆளுநரின் ஒப்புதலுக்கு திமுக அரசு அனுப்பி இருந்தது.
இந்த மசோதாவை நிறைவேற்ற மறுத்து ஆளுநர் ஆர் என் ரவி அதை திருப்பி அனுப்பி விட்டார்.
இதனால் திமுகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். முன்னாள் நீதிபதியான சந்துரு, ஆளுநர் என்ன 4 எம்.எல்.ஏக்களுக்கு கட்சி தலைவரா? 234 உறுப்பினர்கள் கொண்ட அவையை மதிப்பவரா என நீதிபதி சந்துரு கேள்வி எழுப்பியுள்ளார்.
