ஏழு பேர் விடுதலை கவர்னர் முடிவு குறித்து கஸ்தூரி-நாங்கள் மியூசிக் சேர் விளையாண்டு கொண்டிருக்கிறோம்

27

நடிகை கஸ்தூரி அரசியல் மற்றும் பொதுக்கருத்துக்கள் பலவற்றை சமூக வலைதளங்களில் பேசி வருபவர். சமீபத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  கைது செய்யப்பட்டு ஜெயிலில் பல வருடங்கள் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து கவர்னர் முடிவு எடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் எனக்கு அதிகாரம் இல்லை குடியரசுத்தலைவர்தான் முடிவு எடுப்பார் என கவர்னர் சொல்லி விட்டார்.

ஏழு பேரின் விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்த பலருக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. நடிகை கஸ்தூரி இது குறித்து கூறும்போது, ஏற்கனவே தமிழ்நாடு அரசு முடிவு செய்துகொள்ளலாம் என தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது அரசும் அமைச்சர்களும் ஆளுநருக்கு பரிந்துரைத்தனர்.

ஒரு வருடம் கழித்து அவர் அதை மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்புகிறார்? 27 ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் இன்னும் மியூசிக் சேர் விளையாடுகிறோம்.

ஐஎன்சி, ஜேடி, பிஜேபி யாரும் வித்தியாசமானவர்கள் இல்லை என கஸ்தூரி கூறியுள்ளார்

பாருங்க:  இந்த டிவிஸ்ட்ட எதிர்பார்க்கல.. ஷெரினை ஏமாற்றிய பிக்பாஸ் (புரமோ வீடியோ)