தமிழக கவர்னராக உள்ள மேதகு ரவி அவர்கள் இன்று மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் வந்தார். இங்குள்ள அமிர்த கடேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்த கவர்னர் அங்கு ஸ்வாமி தரிசனம் செய்ய வந்தார்.
மணப்பந்தல் வழியாக வந்த கவர்னரின் பாதுகாப்பு வாகனங்களின் மீது கம்புகளும் கொடிக்கம்புகளும் வீசப்பட்டது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இது குறித்து கூறியிருப்பதாவது,
தன் கட்சியினுடைய சித்தாந்தம் தன் கண்களை மறைத்து அதன் மூலமாக முதலமைச்சர் பணியை சரியாக செய்ய முடியவில்லை என்ற நிலைமை வரும் பொழுது, அந்த பதவியில் இருந்து விலகுவது உத்தமம்! இன்று நம் மேதகு ஆளுநருக்கு மயிலாடுதுறையில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு, மாநில அரசே முழு பொறுப்பு!
என அண்ணாமலை கூறியுள்ளார்.