தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு! எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்?

954

கொரொனாவின் தாக்கம் இந்திய அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் தொடர்ச்சியாக, நோய் தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவை இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. அதன்படி ஏப்ரல் 20க்கு பிறகு சில ஊரடங்கு தளர்வுகளை, அந்த அந்த மாநில அரசுகள் முடிவு செய்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துயிருந்தது.

இதனையடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் குறித்து இன்று காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து வரும் மே 3ம் தேதிக்குள் ஊரடங்கு முடியும் நிலையில் முதற்கட்டமாக சில பணிகளை மேற்கொள்ளலாம் என்று அனுமதி அளித்துள்ளார்

அதன்படி, தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம்…?
>மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம்
>குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி
>கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி
>நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ள அனுமதித்துள்ளது தமிழக அரசு

பாருங்க:  வேலு நாச்சியார் படத்தில் வேலு நாச்சியாராக நயன்தாரா நடிக்கிறாரா?
Previous articleஜோதிகா சர்ச்சை! ஏன் அப்படி பேசினார்? விளக்கமளித்த தஞ்சாவூர் இயக்குனர்!
Next articleலாக் டவுன்ல மீன் சாப்படனும்னு ஆசையா இருக்கா? இதோ வகைவகையா சாப்படலாம்! அமைச்சரின் தகவல்