கொரொனா தாக்கத்தால் உலகமே திக்குமுக்காடி உள்ளது. இதனால் உலகனின் பல்வேறு நாடுகளும் இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வருகின்றது. இந்தியாவை பொருத்தவரை அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால், தமிழக அரசு அனைத்து வகை மக்களும் பயன் பெறும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகின்றது. அவற்றில் குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் ரேஷன் கடையில் விலையில்லா அத்தியாவாசிய பொருட்களை மக்களுக்கு அளித்து வருகின்றது. இந்த திட்டம், தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால், வரும் ஜீன் மாததிற்கும் ரேஷன் கடையில் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின கையாக நாளொன்றுக்கு ரூ.200 வழங்கப்படும் என்றும் இதனால் 34,000 ரேஷன் கடைகளில் பணியாற்றும் 24,000 பணியாளர்கள், இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.